புண்ணிய தலங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் இயக்கம்

பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள் உள்பட 14 பெட்டிகள் உள்ளன.
புண்ணிய தலங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் இயக்கம்
Published on

சென்னை,

இந்தியன் ரெயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி.யானது சுற்றுலாப்பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள் உள்பட 14 பெட்டிகள் உள்ளன. பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் ஐ.ஆர்.சி.டி.சி., தென்மண்டலம் சார்பில் நெல்லையில் இருந்து புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா ரெயில் நெல்லையில் இருந்து தொடங்கி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, திரிவேணி சங்கமம் (பிரயாக்ராஜ்), கயா மற்றும் அயோத்யா ஆகிய புண்ணிய தலங்களுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 9 நாட்களுக்கான சுற்றுப்பயணம் அடுத்தமாதம் 6-ந் தேதி தொடங்குகிறது.

ஒரு நபருக்கு ரூ.18,550 கட்டணமாகும். மத்திய, மாநில மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த சுற்றுலா ரெயிலில் பயணித்தால் எல்.டி.சி. சான்றிதழ்களை பெறலாம். மேலும் தகவல்களுக்கு www.irctctourism.com என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com