ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வைர கிரீடம் வழங்கிய பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன்


ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வைர கிரீடம் வழங்கிய பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன்
x

பரதநாட்டிய கலைஞர் ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வைர கிரீடத்தை வழங்கியுள்ளார்.

திருச்சி,

திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடத்தை, பரதநாட்டிய கலைஞரான ஜாகிர் உசேன் இன்று வழங்கினார். அந்த கிரீடத்தை கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாகீர் உசேன், இந்த கிரீடம் 3 ஆயிரத்து 160 கேரட் மாணிக்க கல், 600 வைர கற்கள் மற்றும் மரகதக் கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தான் பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் அரங்கநாதர் மேல் உள்ள பற்றால் இதனை செய்ததாக அவர் குறிப்பிட்டார். உலகில் முதல் முறையாக மாணிக்க கற்களால் செய்யப்பட்ட வைர கிரீடம் இது என்று அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story