ரூ.47 லட்சத்தில் நலத்திட்ட பணிகள்

புரிசை ஊராட்சியில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.
ரூ.47 லட்சத்தில் நலத்திட்ட பணிகள்
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புரிசை ஊராட்சியில் காஞ்சீபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.

விழாவில் காஞ்சீபுரம் எம்.பி. க.செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர். மேலும் ரூ.27 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட சமுதாயக்கூடத்தை கிராம மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.

விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய குழு துணைத்தலைவர் பி.சேகர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் லோகு தாஸ், லோகநாயகி திருஞானசம்பந்தம், உலகநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரஸ்வதி, தனலட்சுமி ஜெயவேல், சந்திரிகா, எஸ்.கே சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com