பெரம்பூர் தொகுதியில் தவெக அலுவலக திறப்பிற்காக பூமி பூஜை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
பெரம்பூர் தொகுதியில் தவெக அலுவலக திறப்பிற்காக பூமி பூஜை
Published on

சென்னை,

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதி அலுவலக திறப்பிற்கான பூமி பூஜை நிகழ்வில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் V.சிவா அவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு (வடக்கு) மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதி, வட்டம், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com