கந்தர்வகோட்டையில் ரூ.28 லட்சம் பணிகளுக்கான பூமி பூஜை

கந்தர்வகோட்டையில் ரூ.28 லட்சம் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
கந்தர்வகோட்டையில் ரூ.28 லட்சம் பணிகளுக்கான பூமி பூஜை
Published on

கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரவம்பட்டி ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் ரூ.10 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை, கந்தர்வகோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தரைத்தளம் அமைக்கும் பணிக்கு ரூ.5.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதற்கான பணிகள் தொடக்க விழாவையொட்டி பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சின்னதுரை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். திருச்சி விமான நிலையத்தின் ஆலோசனை குழு உறுப்பினர் கே.கே. செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார். தாடர்ந்து வளவம்பட்டி பஸ் நிறுத்தத்தில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது. இதில் கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் ஐயா, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், கந்தர்வகோட்டை நகர செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் கந்தர்வகோட்டை தமிழ்ச்செல்வி, அரவம்பட்டி சிவரஞ்சனி, வளவம்பட்டி பாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com