ரூ.9 லட்சத்தில் மயானப்பாதை அமைக்க பூமி பூஜை

வன்னியமோட்டூர் கிராமத்தில் ரூ.9 லட்சத்தில் மயானப்பாதை அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது.
ரூ.9 லட்சத்தில் மயானப்பாதை அமைக்க பூமி பூஜை
Published on

சோளிங்கரை அடுத்த வன்னியமோட்டூர் கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு செல்லும் ஓடைகால்வாயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் பழனி முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் மோகன் குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சோளிங்கர் மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்தர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் எஸ்.என்.உதயகுமார், ஒன்றிய நிர்வாகிகள் சக்கரவர்த்தி, தண்டபாணி, விஜயகுமார், கிளை நிர்வாகிகள் ஆனந்தன், சின்னதுரை, ராதாகிருஷ்ணன், ஏழுமலை, கார்த்தி, வன்னியமோட்டூர் ஏழுமலை மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு எஸ்.என்.பூரணசந்திரன் நிதி உதவி அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com