ரூ.1.16 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை

பண்டஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.1.16 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
ரூ.1.16 கோடியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட பூமி பூஜை
Published on

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் பண்டஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நபார்டு திட்ட நிதியில் ரூ.1.16 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்த கட்டுமான பணிகளை குறித்த காலத்துக்குள் முடித்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்செல்வன், பா.ம.க. மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சசிகலா ராஜசேகர் (பங்குநத்தம்), சிலம்பரசன் (எர்ரபையனஅள்ளி), ஒன்றிய செயலாளர்கள் சக்தி, மணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முருகேசன், மாதப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சித்தன், ஒன்றிய தலைவர்கள் விஜி, வீரமணி, பொறுப்பாளர்கள் பாண்டுரங்கன், பாக்கியராஜ், பெருமாள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com