விக்கிரமங்கலம் அரசு பள்ளியில் சைக்கிள் போட்டி

விக்கிரமங்கலம் அரசு பள்ளியில் சைக்கிள் போட்டி நடைபெற்றது.
விக்கிரமங்கலம் அரசு பள்ளியில் சைக்கிள் போட்டி
Published on

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 14, 17, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. இதனை விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், அன்பழகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த போட்டி வி.கைகாட்டி-முனியங்குறிச்சி பாதையில் ஆரம்பிக்கப்பட்டு விக்கிரமங்கலம் பஸ் நிலையம் அருகே நிறைவடைந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்டவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சென்றனர். இதில் வெற்றி பெற்ற 12 மாணவ-மாணவிகளுக்கு விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com