மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
Published on

கள்ளக்குறிச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் மாணவ- மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடைபெற்றது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டியை கலெக்டர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 17 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர், 13 வயதுக்குட்பட்டோர் என பிரிக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் ஆறுதல் பரிசாக 4 முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களுக்கு தலா ரூ.250 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயக்குமாரி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வக்குமார், உடற்கல்வி இயக்குனர்கள் பாலுசாமி, ஹரிகரன், உடற்கல்வி ஆசிரியர்கள் சாமிதுரை, சதீஷ், பாலமுருகன், ஆதி, தனஞ்செல்வன், சுரேஸ், கலைச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com