தென்காசியில் சைக்கிள் போட்டி; கலெக்டர் தகவல்

தென்காசியில் நாளை மறுநாள் சைக்கிள் போட்டி நடக்கிறது.
தென்காசியில் சைக்கிள் போட்டி; கலெக்டர் தகவல்
Published on

தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தென்காசி மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (சனிக்கிழமை) சைக்கிள் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. போட்டியானது 14-ந் தேதி காலை 6.30 மணிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஐ.டி. முக்கிலிருந்து தொடங்கி பண்பொழி ரோடு வழியாக செங்கோட்டை ரயில்வே கேட் வரை சென்று முடிவடைகிறது.

போட்டியில் பங்கேற்கும் அனைவரும் முன்பதிவு செய்திருக்க வேண்டும். நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்ய மாவட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது 9786918406 9489153516 என்ற செல்போன் எண்களிலோ பதிவு செய்து கொள்ளலாம். போட்டியில் பங்குபெறும் அனைவரும் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பங்குபெறும் மாணவ மாணவிகள் தங்கள் பள்ளி, கல்லூரியில் இருந்து போனபைட் சான்றிதழ் கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். வெற்றி பெறும் ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000, நான்காம் பரிசு முதல் 10-ம் பரிசு வரை ரூ.250 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. பரிசு பெற வங்கியின் முதல் பக்க நகலை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com