பெரிய பட்டாம்பூச்சி மாதத்தையொட்டி செம்மொழி பூங்காவில் இன்று பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணி

அகில இந்திய அளவில் ‘பெரிய பட்டாம்பூச்சி மாதம்' செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
பெரிய பட்டாம்பூச்சி மாதத்தையொட்டி செம்மொழி பூங்காவில் இன்று பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணி
Published on

இந்த நாட்களில் பட்டாம்பூச்சிகள் பற்றிய விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டு வருவதோடு, கணக்கெடுக்கும் பணிகளும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சென்னை ராணி மேரிக் கல்லூரி மாணவிகள் கணக்கெடுக்கும் பணியில் ஒவ்வொரு ஆண்டும் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பாண்டில் செம்மொழி பூங்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மேல் பட்டாம்பூச்சியை கணக்கெடுக்கும் பணியில் மாணவிகள் ஈடுபட உள்ளனர். வரும் வாரத்தில் ராணிமேரி கல்லூரி வளாகம் மற்றும் மைலேடீஸ் பூங்கா, கொரட்டூர் ஏரிக்கரை உள்பட முக்கிய பகுதிகளில் பட்டாம்பூச்சி கணக்கெடுக்கும் பணியில் மாணவிகள் களம் இறங்குகின்றனர்.

இதுகுறித்து ராணி மேரி கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் பவானி கோவிந்தராஜூலு கூறும் போது, "கடந்த ஆண்டு ராணி மேரி கல்லூரி வளாகத்தில் பட்டாம்பூச்சி கணக்கெடுத்ததில் 81 வகையான பட்டாம்பூச்சி இருந்தது கண்டறியப்பட்டது. தேனீக்களுக்கு நிகராக பட்டாம்பூச்சிகள் தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு உதவியாக இருக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பால் பட்டாம்பூச்சி இனங்கள் அழிந்து வருகின்றன. அதனை மீட்டெடுக்கவும், அதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com