டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி: தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி

டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி: தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்? - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி
Published on

சென்னை,

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 66 இடங்களில் ஆழ்துளையிட்டு நிலக்கரி எடுப்பதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் ஓரத்தநாடு தாலுகாவில் 11 இடங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வேளான் மண்டலங்களில் எப்படி நிலக்கரி சுரங்கம் அமைக்க முடியும்?. ஏலம் அறிவிக்கப்பட்ட 6 திட்டங்களில் 5 திட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலத்தில் வருகிறது. மாநில அரசுக்கு தெரியாமல் மத்திய அரசு எப்படி ஏலம் விடும்?. ஒரு பிடி மண்ணை கூட எடுக்க விடமாட்டோம்.

காவிரி டெல்டாவை அழிக்க மிகப்பெரிய சூழ்ச்சி நடக்கிறது. இதனை முதல்-அமைச்சர் இதுவரை கண்டுகொள்ளவில்லை. இதில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்?. புதிய சுரங்கம் அமைக்க அனுமதி கொடுக்கமாட்டோம் என முதல்-அமைச்சர் அறிவிக்க வேண்டும். சட்டப்பேரவையில் என்எல்சி நிறுவனத்தின் 6 சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com