தேனி: பைக் மீது ஆம்னி பஸ் மோதி திமுக கவுன்சிலர், மனைவி பலி

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி: பைக் மீது ஆம்னி பஸ் மோதி திமுக கவுன்சிலர், மனைவி பலி
Published on

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42). இவர் அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலராக செயல்பட்டு வந்தார். மணிகண்டனின் மனைவி சுகன்யா (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், மணிகண்டன் நேற்று இரவு தனது மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். உத்தமபாளையம் அருகே சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த ஆம்னி பஸ், பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த இருவரும் படுகாயமடைந்தனர். உடனடியாக அப்பகுதியினர் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com