சென்னை அண்ணா சாலையில் பைக் சாகசம் - மேலும் 5 பேர் கைது

பைக் சாகத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அண்ணா சாலையில் பைக் சாகசம் - மேலும் 5 பேர் கைது
Published on: 

சென்னை,

சென்னை நகரில் சனிக்கிழமை இரவு என்றாலே இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபடுவது வழக்கமாக இருந்தது. போலீசார் எடுத்த கடும் நடவடிக்கையால் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த சில மாதங்களாக அமைதி காத்தனர்.

இந்தநிலையில், சனிக்கிழமையன்று இரவு தென் சென்னையில் பல பகுதிகளில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் பகுதியில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றனர். இதுபோல் மோட்டார் சைக்கிள் சாகத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ், விக்னேஷ் குமார், அம்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ், வடபழனியை சேர்ந்த தர்ஷன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பதிவு எண் இல்லாமல் ஓட்டிய 56 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் சாக சம் என்ற பெயரிலும், பைக் ரேஸ் என்ற பெயரிலும் அதிவேக மாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com