திருச்சியில் பட்டாசு கொளுத்தியபடி பைக் வீலிங் செய்த 7 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து

திருச்சியில் பல்வேறு பகுதிகளில் பைக்கில் வீலிங் செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் பட்டாசு கொளுத்தியபடி பைக் வீலிங் செய்த 7 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து
Published on

திருச்சி,

தீபாவளி பண்டிகையின்போது, இளைஞர் ஒருவர் தன் பைக்கில் பட்டாசை கொளுத்திக்கொண்டு வீலிங் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து திருச்சி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பதும், இந்த சாகசத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய்(வயது 24) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில் பைக் ரைடர்ஸ் மணிகண்டன் அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் பைக்கில் வீலிங் செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், திருச்சியில் பட்டாசு கொளுத்தியபடி பைக் வீலிங் செய்த 7 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து  போக்குவரத்துத்துறை ஆணையர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com