இருதரப்பினர் மோதல்; 3 பேர் படுகாயம்

இருதரப்பினர் மோதலில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இருதரப்பினர் மோதல்; 3 பேர் படுகாயம்
Published on

ஏர்வாடி:

திருக்குறுங்குடி நம்பிதலைவன் பட்டயம் கீழத்தெருவை சேர்ந்தவர் முப்பிடாதி (வயது 39). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசனுக்கும் (38) தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், முப்பிடாதியை கீழே தள்ளி தாக்கியதாகவும், இதனை தடுக்க வந்த அவரது தாயார் முத்துதுரைச்சியையும் (65) தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபோல முப்பிடாதி, அவரது தாயார் முத்துதுரைச்சி, தந்தை ஆறுமுகம் (70) ஆகியோர் சேர்ந்து முருகேசனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் காயமடைந்த முப்பிடாதி, முத்துதுரைச்சி, ஆகியோர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையிலும், முருகேசன் நாகர்கோவில் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இதுதொடர்பாக முருகேசன், முப்பிடாதி, முத்துதுரைச்சி, ஆறுமுகம் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com