இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு
Published on

தொட்டியம்:

இருதரப்பினர் மோதல்

தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் சரத்குமார்(வயது 21). இவர் நேற்று தனது வீட்டின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கதிர் என்பவர், மோட்டார் சைக்கிளில் சென்ற சரத்குமாரின் நண்பர்களான கவுதம் மற்றும் தருண் ஆகியோரை பார்த்து மெதுவாக செல்ல முடியாதா? என்று கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து சரத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் விஜய், ராகுல் ஆகியோர் கதிரிடம் கேட்டபோது வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் அருகில் கிடந்த கட்டையால் தாக்கிக் கொண்டனர்.

6 பேர் காயம்

இதில் இருதரப்பை சேர்ந்த பிரபு, பாலாஜி, கதிர், சரத்குமார், விஜய், ராகுல் ஆகிய 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொட்டியம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து இரு தரப்பைச் சேர்ந்த சரத்குமார், விஜய், ராகுல், கதிர், பாலாஜி, பிரபு, சீனிவாசன் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com