இருதரப்பினர் தகராறு; 6 பேர் காயம்

நெல்லை அருகே இருதரப்பினர் தகராறில் 6 பேர் காயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பினர் தகராறு; 6 பேர் காயம்
Published on

பேட்டை:

நெல்லை அருகே இருதரப்பினர் தகராறில் 6 பேர் காயம் அடைந்தனர். மோட்டார் சைக்கிள்கள், நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேனர் தகராறு

நெல்லை அருகே உள்ள குன்னத்தூரில் இருதரப்பை சேர்ந்தவர்களின் திருமணம் நடந்தது. இதற்காக அங்குள்ள சாலையோரம் பேனர் அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பு பேனர்களையும் அகற்றுமாறு அறிவுறுத்தினர்.

6 பேர் காயம்

இந்த நிலையில் நேற்று இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரின் பேனரை பாட்டிலால் கிழித்தனர். இதனால் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.

இதற்கிடையே ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் வசிக்கும் பகுதிக்கு சென்று அங்கிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், நாற்காலிகள் ஆகியவற்றை அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக இருதரப்பினர் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com