போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் தகராறு; 2 பேர் கைது

போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் தகராறு; 2 பேர் கைது

போலீஸ் நிலையத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன். இவர் நிலத்தகராறு சம்பந்தமாக சங்கரன்கோவிலை சேர்ந்த பெண் மீது சின்ன கோவிலான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக விசாரணைக்காக இருதரப்பினரும் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை தடுக்க முயன்ற காவலர் அருணாசலம் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர் கொடுத்த புகாரின் பேரில், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக சண்முகநாதன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். அந்த பெண் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com