தமிழகத்துக்கு இருமொழி கொள்கையே போதுமானது: கார்த்தி சிதம்பரம்

இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு மும்மொழி கொள்கை தேவையில்லை. இருமொழி கொள்கையே போதும். இதுவே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. மூன்றாவதாக ஒரு மொழியை கற்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது. சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3 மொழிகள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மத்திய அரசு 3 மொழி கொள்கையை பின்பற்றாவிட்டால் நிதி தரமுடியாது என கூறுகிறது.
இத்தகைய மறைமுக இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் இருமொழி கல்வியை பயின்று வளர்ந்தேன். எனது மகளும் அதேபோன்றே பயின்றார். தமிழ், ஆங்கிலம் மொழிகளை மட்டுமே படித்தோம். தனியார் பள்ளி என்று சொல்லும்போது சி.பி.எஸ்.சி., இன்டர்நேஷனல் போர்டு பள்ளிகள் உள்ளன. அவற்றில் சில பள்ளிகளில் இந்திய மொழிகளே இல்லாமல் கூட இருக்கலாம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்கள் தலைமையில் செயல்பட்ட அ.தி.மு.க. கூட்டு தலைமையில் செயல்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. சிங்கம்புணரி தாலுகாவில் அரசு கலைக்கல்லூரி அமைக்க அரசு ஆய்வு செய்து முடிவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






