

கோவை,
ரூ.40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பில்கலெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் வீடு கட்டும் காண்ட்ராக்டராக சந்தோஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் புதிதாக கட்டிய வீட்டிற்கு வரி விதிப்பதற்காக கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியாற்றிய பில்கலெக்டர் பிரதீப் குமார் வரி விதிப்பதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து சந்தோஷ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். உடனே போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சந்தோஷிடம் கொடுத்து அனுப்பினர். ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சந்தோஷ் பில்கலெக்டரிடம் கொடுத்தார். அதனை பெற்ற பில்கலெக்டர் பிரதீப் குமாரை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.