"பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு" - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அதிரடி

மாநகராட்சி அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு பின்பற்றப்படுமென சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
"பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு" - சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அதிரடி
Published on

சென்னை,

மாநகராட்சி அலுவலகங்களில் சரியான வருகை பதிவேட்டை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து இம்மாத இறுதி முதல் பயோ மெட்ரிக் முறை மூலம் வருகைப்பதிவேடு பின்பற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

ராயபுரம் 5 ஆவது மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்துகொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, கழிவுநீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com