

சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மைத்துறை செயல்பட்டு வருகிறது. இந்த துறையின் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் காலை 10 மணிக்கு அலுவலகத்துக்கு வந்துவிட வேண்டும் என்றும், அதற் காக 'பயோமெட்ரிக்' முறையில் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்றும் கடந்த ஆட்சிக்காலத்தில் உத்தரவிடப்பட்டது.
ஆனால் இந்த உத்தரவுக்கு சில அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே அதை கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த மனிதவள மேலாண்மைத்துறை யின் துணை செயலாளர் தங்கபாப்பா சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மனிதவள மேலாண்மைத்துறையின் முதன்மைச்செயலாளர் அறிவுறுத்தலின் படி, ஜூன் 1-ந் தேதி (அதாவது நாளை) முதல் பயோ மெட்ரிக் முக அடையாள அங்கீகார பதிவேட்டு முறை அமல்படுத்தப்படுகிறது. எனவே இந்த துறையின் அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள், தினமும் காலை 10 மணிக்கு வந்து 'பயோ மெட்ரிக்' முக அடையாள அங்கீகார பதிவேட்டு முறையில் உங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும். அதோடு, வரு கைப்பதிவேட்டிலும் கையெழுத்திட வேண்டும். அதுமட்டுமல்லாமல், அனைத்து ஊழியர்களும் தங்களின் அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.