பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்: தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.
பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல்: தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்றும் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வியாபாரிகள் நெல் கொடுப்பதை தவிர்க்க பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் முறையில் நெல்கொள்முதல் செய்யப்படுவதால் அதிக அளவிலான விவசாயிகள் பலன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளது.

நெல்லை கொடுக்கும் விவசாயிகளிடம் மூட்டைக்கு கூடுதலாக பணம் வசூல் செய்யும் பணியாளர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான பணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com