புதுக்கோட்டையில் 20 இடங்களில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
புதுக்கோட்டையில் 20 இடங்களில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு
Published on

பறவைகள் கணக்கெடுப்பு

பறவைகள் இனப்பெருக்கத்திற்காக பல்வேறு நாடுகள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் வருகை புரிகின்றன. இந்தநிலையில், வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள இச்சூழ்நிலையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நேற்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

20 இடங்களில் நடக்கிறது

இதையடுத்து, புதுக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட அன்னவாசல் கண்மாய், ஆரியூர் கண்மாய், அருவாக்குளம், கவிநாடு கண்மாய், அறந்தாங்கி வனச்சரகத்திற்குட்பட்ட பொன்பேத்தி ஏரி, செய்யானம் ஏரி, கரகத்திக்கோட்டை கண்மாய், முத்துக்குடா கடல், கோடியக்கரை கடல், பொன்னமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட காரையூர் காரை கண்மாய், ஒலியமங்கலம் கண்மாய், ஏனாதி கண்மாய், கொன்னை கண்மாய், கீரனூர் வனச்சரகத்திற்குட்பட்ட நீர்பழனி கண்மாய், ஔவையார்பட்டி கண்மாய், பேராம்பூர் கண்மாய், குளத்தூர் கண்மாய், திருமயம் வனச்சரகத்திற்குட்பட்ட தாமரை கண்மாய், பெல் ஏரி, நல்லம்மாள் சமுத்திரம் ஆகிய 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று மேற்கொள்ளப்படுகிறது.

பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு அல்லது குறைவிற்கான காரணம் குறித்து ஆராயப்படும். ஒவ்வொரு ஈர நிலத்திலும் மேற்கொள்ளப்படும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் ஒரு பறவைகள் நிபுணர், 2 தன்னார்வலர்கள், 2 வனத்துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் இடம்பெற உள்ளனர்.

உணவு, நீர்

இப்பணிகள் மூலம் பறவைகளுக்கு தேவையான உணவு, நீர் மற்றும் இருப்பிடம் ஆகியவை போதுமான அளவில் கிடைக்கின்றனவா? என்பது குறித்து கணக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவலை மாவட்ட வன அலுவலர் பிரபா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com