

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தமிழக கேரள எல்லையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தென்காசி மாவட்ட கலெக்டர் மோனிகா ராணா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டதிலுள்ள கோழிபண்ணைகளில் ( H5N1 ) பறவைகாய்சசல் பரவியயிருப்பதை போபாலில் உள்ள நிறுவனம் உறுதி படுத்தி உள்ளதாக தவகவல் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக 20.11.2026 முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கேரளாவில் இருந்து கோழிகள் வாத்துகள், முட்டை, கோழி எச்சங்கள், கோழி தீவனங்கள் ஆகியவற்றை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகிறன்றனர். கேரளாவிற்கு கோழி மற்றும் முட்டைகளை இறக்கிவிட்டு திரும்பும் காலி வாகனங்களுக்கு முழுவதுமாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.கேரளாவில் இருந்து காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை ஏற்றி வரும் அனைத்து கனரக, இலகுரக வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிட்டு வாகனங்கள் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில் கிருமி நாசினி மருந்தினை தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர், கிருமி நாசினி தெளிப்பவர்கள் இருவர் கொண்ட குழுவினர் மூலம் 24 மணி நேரமும் இரவு பகல் பணிகளாகப் பிரித்து 2 குழுக்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையானது தமிழக கேரள எல்லைப் பகுதியான புளியரை சோதனைச்சாவடியில் 90 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும், பறவைக் காய்ச்சல் தமிழகத்திற்குள் பரவாத வண்ணம் தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே தமிழக எல்கைக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாகவும் கோழிப் பண்ணைகளில் விழிப்புணர்வு மற்றும் உரிய பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்கவும் என்று தெரிவித்துள்ளார்.