முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

கடையம் பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா
Published on

கடையம்:

கடையம் தெற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவ்வை ஆசிரமத்தில் மதிய உணவு வழங்கபட்டது. மேலும் கடையம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு, சின்னத்தேர் திடல் ரவணசமுத்திரம், அழகப்பபுரம், சம்பன்குளம் ஆகிய பகுதிகளில் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

தொடர்ந்து சிவசைலத்தில் உள்ள சாந்தி காது கேளாதோர் பள்ளியில் உள்ள 150 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி கொடியேற்றி இனிப்பு வழங்கி, மதிய உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி கோதர்மைதீன், அவைத் தலைவர் கே.பி.என்.சேட், துணைச் செயலாளர் முல்லையப்பன், சசிகுமார், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் புகாரி மீரா சாகிப், அரவிந்த், அர்ஜுனன், ஞானராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் முகம்மது உசேன், ரூஹான் ஜன்னத் சதாம், ஜீனத் பர்வீன் யாக்கோப், மலர்மதி சுந்தரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ஜகாங்கீர், மாவட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ரவணசமுத்திரத்தில் உள்ள மாற்றுத்திறனாளிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் நிதியுதவி வழங்கினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com