பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை


பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை
x
தினத்தந்தி 5 Jan 2026 10:29 AM IST (Updated: 5 Jan 2026 11:57 AM IST)
t-max-icont-min-icon

கனிமொழி எம்.பி., இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தூத்துக்குடி,

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

1 More update

Next Story