பனகல் அரசர் பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் புகழாரம்

பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.
பனகல் அரசர் பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் புகழாரம்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று!

பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.

பெண்களுக்கு வாக்குரிமை

சமூகநீதியின் அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!

நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com