

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனால், இன்று காலை முதலே #HBDRajinikanth என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
அன்பு சகோதரர் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:- அன்பு சகோதரர் "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் இறைவன் அருளால் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீடூழி வாழ வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.