2 பெண் அமைச்சர்களுக்கு பிறந்த நாள்: சட்டசபையில் வாழ்த்து

கால்நடைத்துறை அமைச்சர் கமலி, பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோருக்கு இன்று பிறந்த நாள்.

2 பெண் அமைச்சர்களுக்கு பிறந்த நாள்: சட்டசபையில் வாழ்த்து
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்று 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கூட்டத்தை திருக்குறள் வாசித்து தொடங்கிவைத்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, கால்நடைத் துறை அமைச்சர் கமலி, பால்வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி ஆகியோருக்கு இன்று பிறந்த நாள் என்று குறிப்பிட்ட் அவர், இருவருக்கும பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யும் அவர்கள் இருக்கை நோக்கி திரும்பி பார்த்து வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலரும் அமைச்சர்கள் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களும் எழுந்து நின்று தங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com