பிரியாணி ரூ.180: வேட்பாளர் செலவை கண்காணிக்க பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வேட்பாளர்களின் உணவு செலவின பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரியாணி ரூ.180: வேட்பாளர் செலவை கண்காணிக்க பட்டியல் வெளியிட்டது தேர்தல் ஆணையம்
Published on

தமிழ்நாடு உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதேபோல், ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களின் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும். அதில் அவர்கள் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவு செய்யலாம் எனும் உச்சவரம்பையும் நிர்ணயிக்கும். அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை கணக்கிட ஏதுவாக உணவு பட்டியலுக்கான விலையயும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு:

காபி – ரூ.18

டீ, –ரூ.12

இட்லி (2) – ரூ.40

சப்பாத்தி அல்லது பூரி (2) – ரூ.60,

பொங்கல் –ரூ.50,

வடை –ரூ.15

சைவ சாப்பாடு ரூ.110,

அசைவ சாப்பாடு –ரூ.350,

வெஜ் பிரியாணி ரூ.50,

கலவை சாதம் –ரூ.45

சிக்கன் பிரியாணி – ரூ.110,

மட்டன் பிரியாணி – ரூ.180,

குடிநீர் பாட்டில் – ரூ.15

இப்பட்டியல் அடிப்படையில்தான் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் கணக்கிடப்படும்.

வாகனப் பயன்பாட்டிற்காக, 150 கிலோமீட்டர் அல்லது 15 மணி நேரத்திற்கு சாதாரண டூரிஸ்ட் கார்களுக்கு 3,300 ரூபாயும், குளிர் சாதன வசதி கொண்ட கார்களுக்கு 3,400 ரூபாயும், இன்னோவா போன்ற பெரிய ரக வாகனங்களுக்கு 5,250 ரூபாயும் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com