ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு ராகுல் காந்தி மீது தமிழிசை பாய்ச்சல்

2 லட்சம் தமிழர்களை கொன்ற போது மவுனம் ஏன்? என ராகுல் காந்திக்கு தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். #BJP #RajivGandhiassassination
ராஜீவ் கொலையாளிகளுக்கு மன்னிப்பு ராகுல் காந்தி மீது தமிழிசை பாய்ச்சல்
Published on

சென்னை,

ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளதை தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ராகுல் காந்திக்கு, யாரும் எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத வகையில் இப்படி ஒரு எண்ணம் தோன்றி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. ராஜீவ் கொலைக்கு பழிவாங்க வேண்டும் என்ற ஒரே குரூர உணர்வோடு மத்தியில் காங்கிரஸ் ஆண்ட போது செயல்பட்டது. இலங்கையில் மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்தி முடித்தார்கள். முழுக்க முழுக்க இந்திய அரசு துணை நின்று தமிழினத்தை அழித்தனர். இந்திய அரசின் துணையோடுதான் தமிழர்களை அழிக்க முடிந்ததாக இலங்கை ராணுவ தளபதி வெளிப்படையாக கூறினார். அன்று வராத உணர்வு இன்று எப்படி திடீரென்று வந்தது?

அதே உணர்வை அன்று வெளிப்படுத்தி இருந்தால் 2 லட்சம் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டு இருக்க மாட்டார்களே? தமிழர்களை அழித்த பிறகு இப்படி ஒரு போலி நடிப்பு ஏன்? பிரியங்கா காந்தி வேலூர் ஜெயிலில் நளினியை ரகசியமாக சந்தித்து பேசினாரே, அது என்ன நோக்கத்துக்காக? அதன் பிறகுதானே இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க மத்திய அரசு துணை போனது. அதன் வெளிப்பாடுதானே பிரபாகரனின் மரணமும், இப்போது பிரபாகரன் கொடூரமாக கொல்லப்பட்டது வருத்தமாக உள்ளது என்றால் மக்கள் ஏற்பார்களா? இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com