திமுக நிர்வாகியிடம் ஆதரவு கேட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன்

அவிநாசி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார்.
திமுக நிர்வாகியிடம் ஆதரவு கேட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன்
Published on

திருப்பூர்,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவிநாசி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் மத்திய மந்திரி எல்.முருகன் இன்று திமுக முன்னாள் எம்.எல்.ஏவின் வீட்டுக்கு சென்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரினார்.

1996-2001ம் ஆண்டு வரை அவிநாசி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இளங்கோவின் இல்லத்திற்குச் சென்று, அவரது மகனும் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினருமான ஆனந்தனையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்கும்படி, அவிநாசி தொகுதியின் பாஜக வேட்பாளர் எல்.முருகன் ஆதரவு கோரினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com