விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விஜயதரணி தோல்வி

விஜயதாரணி, இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை வெற்றி பெற்றிருந்தார்.
விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் விஜயதரணி தோல்வி
Published on

​2026 சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை, விளவங்கோடு தொகுதி ஒரு நட்சத்திரத் தொகுதியாக இருந்தது. கடந்த மூன்று முறை காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற விஜயதரணி, தற்போது பா.ஜ.க சார்பில் களம் காண்பதால் இத்தொகுதி விஐபி அந்தஸ்தை பெற்று இருந்தது. இந்த தொகுதியில் , காங்கிரஸ் வேட்பாளர் டி.டி. பிரவீனுக்கும், பா.ஜ.க வேட்பாளர் விஜயதாரணிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கையிலும் இந்த முடிவே பிரதிபலித்தது.

காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் இத்தொகுதியில் விஜயதரணி தோல்வியை சந்தித்தார். காங்கிரஸ் கட்சி சார்பில் களம் இறக்கப்பட்ட பிரவீன் வெற்றி பெற்றார். இவரை களம் இறக்கியதற்கு காங்கிரஸ் கட்சிக்காரர்களே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். எனினும், எதிர்ப்பையும் சமாளித்து வெற்றியை தனதாக்கியுள்ளார் டிடி பிரவீன்

விஜயதரணி, இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை வெற்றி பெற்றிருந்தார். அந்தத் தனிப்பட்ட செல்வாக்கு பா.ஜ.க-வின் வாக்கு வங்கியுடன் இணையும் போது, அது தனக்கு வெற்றியைத் தேடித்தரும் என அவர் மலைபோல நம்பினார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com