பா.ஜ.க. பிரமுகர் மீது மனைவி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

பா.ஜ.க. பிரமுகர் மனைவி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. பிரமுகர் மீது மனைவி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
Published on

திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் ஆர்த்தி. இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் உய்யகொண்டான்திருமலை சண்முகாநகர் 3-வது குறுக்குசாலையில் அரசு அனுமதி பெற்ற ஏ.பி.சி. மாண்டிசேரி பள்ளியை நடத்தி வந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருச்சியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஒருவரின் மனைவியிடம் பள்ளியை பார்த்துக் கொள்ளும்படி கூறி இருந்தேன். இதற்காக வாடகை ஒப்பந்த பத்திரம் போட்டு ஒப்படைத்தேன். இந்தநிலையில் பள்ளியின் அனுமதி முடிந்து ஓராண்டு ஆனநிலையிலும், வாடகை ஒப்பந்தப்பத்திரம் கெடு முடிந்தும், பள்ளியின் கட்டிடம் 30 ஆண்டுகள் கடந்து பழுதான நிலையிலும் பள்ளியை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். பள்ளியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது எனது பெயரில் தான் வரும். பள்ளி கட்டிடத்தை காலி செய்யக்கூறினால் அவர்கள் எங்களை மிரட்டுகிறார்கள். ஆகவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது வீட்டை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com