மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.- தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் வருகிற 12ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.- தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்
Published on

மத்திய அரசைக் கண்டித்து வருகிற 12ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவது தொடர்பாக தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும், நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் மத்திய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக-வையும் கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் 12.2.2026, வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தொழிலாளர் விரோத மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து 12.2.2026 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் நடத்துவதாக அறிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து, வருகிற 12.2.2026, வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com