பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு : கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெறுமா?

மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார்.
பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு : கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெறுமா?
Published on

சென்னை,

சென்னையில் தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பா.ஜனதா தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்பட இருக்கிறது. இந்த நிகழ்வு கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் நடக்கிறது. இதில் மத்திய மந்திரி ஜே.பி.நட்டா பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளார். இதில் மாநில நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.மயிலாப்பூர் தொகுதியில் எனது வெற்றி பிரகாசமாக இருக்கிறது. தமிழகம் முழுவதும் எங்கள் கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்.

விவசாயிகளின் நலனை பற்றிய பேசும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்காக தானிய கிடங்குகள் கட்டித் தராமல் வஞ்சிக்கிறார். மூட்டைக்கு விவசாயிகளிடமிருந்து 40 ரூபாய் கமிஷன் அடிப்பதை என்னவென்று சொல்வது?.விஸ்வகர்மா திட்டம், மும்மொழி கொள்கை போன்ற பல, மத்திய அரசு நல்ல திட்டங்களை, மாநிலத்திற்கு வரவிடாமல் முதல்-அமைச்சர் தடுத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com