பாரதியாரை இழிவுப்படுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.க.வினர் காவல் நிலையத்தில் புகார்

திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேட்டூர் அணை சதுரங்காடி என்ற இடத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலக வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாரதியாரை இழிவுப்படுத்தி பேச்சு: யூடியூபர் மீது பா.ஜ.க.வினர் காவல் நிலையத்தில் புகார்
Published on

கோவில்பட்டி நகர பா.ஜ.க. தலைவர் காளிதாசன் தலைமையில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் நீதிப்பாண்டியன் உள்ளிட்டோர் கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணனிடம் கொடுத்த மனுவில், "திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேட்டூர் அணை சதுரங்காடி என்ற இடத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலக வலியுறுத்தி கடந்த 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் யூடியூபர் ஒருவர் கலந்து கொண்டு, இந்திய விடுதலை போராட்ட வீரர் மகாகவி சுப்பிரமணிய பாரதியை கீழ் தரமான முறையில் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவரது சமூக வலைதள பக்கங்களிலும் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பாரதியாரை இழிவுப்படுத்தி பேசிய யூடியூபர், திராவிட விடுதலை கழகத்தினர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.

இதேபோல் கழுகுமலை மேற்கு ஒன்றிய பார்வையாளர் ஜெகதீஷ் மற்றும் பா.ஜ.க.வினர் கழுகுமலை காவல் நிலையத்திற்கு சென்று பாரதியாரை இழிவாக பேசிய யூடியூபரை கைது செய்ய வலியுறுத்தி புகார் மனுவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வனிடம் கொடுத்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com