நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் பாஜக அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது - ராகுல் காந்தி பேட்டி

பாஜக அரசு நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறினார்.
நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் பாஜக அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது - ராகுல் காந்தி பேட்டி
Published on

கன்னியாகுமரி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ''பாரத் ஜோடோ யாத்ரா'' என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு இருந்து தொடங்கினார்.

அதன் தொடர்ச்சியாக 3வது நாள் நடைபயணத்தில் இன்று சாலையோர கடையில் தேநீர் அருந்தினார். தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியனுடன் கலந்துரையாடினார்.

அதன்பின்னர் தக்கலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியதாவது:-

நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும், தமிழ் அழகான மொழி, ஆனால் கற்றுக்கொள்வதற்கு கடினம் என நினைக்கிறேன்.

இந்தியாவின் ஒற்றுமைக்காகவே நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். நடைபயணம் குறித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை வரவேற்கிறேன். காங்கிரஸ் தன்னுடைய பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறது. மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளை கேட்பதே நடைபயணத்தின் நோக்கம்.

நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் பாஜக அரசு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வருமானவரி, அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுகிறது. பலரும் பாஜக உடன் கைகுலுக்கி சுமூகமாக செல்ல நினைக்கின்றனர். பலவித கருத்தோட்டங்களை கொண்ட இந்தியாவில் ஒற்றை கருத்தை திணிக்க பாஜக முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com