ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு: இடஒதுக்கீட்டினை வழங்கிட மத்திய பாஜக அரசு முன்வர வேண்டும் - மு.க.ஸ்டாலின்

மருத்துவ இடஒதுக்கீட்டில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பு: இடஒதுக்கீட்டினை வழங்கிட மத்திய பாஜக அரசு முன்வர வேண்டும் - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமூகநீதிக்கான சங்கநாதமாக அமைந்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, இடஒதுக்கீடு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தீர்ப்பு.

நான்கு ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்து வந்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

சமூகநீதி வீழ்த்தப்படும் போதெல்லாம் தமிழகமே ஓரணியில் நிற்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் திறமையாக வாதிட்ட மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் உள்ளிட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் பாராட்டுகள்; வாழ்த்துகள்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதைத் தவிர்த்து, நீதிமன்றம் வழங்கியுள்ள மூன்றுமாதக் காலக்கெடுவரை காத்திராமல், உரிய இடஒதுக்கீட்டினை வழங்கிட மத்திய பாஜக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com