ராகுல் காந்தி மக்களவைக்கு வரக்கூடாது என்று பாஜக இப்படி செய்துள்ளது: ஜோதிமணி எம்.பி ஆவேசம்

இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் இதனை நாங்கள் எடுத்து செல்வோம் என்று ஜோதிமணி எம்.பி பேசினார்.
ராகுல் காந்தி மக்களவைக்கு வரக்கூடாது என்று பாஜக இப்படி செய்துள்ளது: ஜோதிமணி எம்.பி ஆவேசம்
Published on

புதுடெல்லி,

அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த கரூர் மக்களவை தொகுதி எம்.பி ஜோதிமணி கூறியதாவது:-

ராகுல்காந்தி மக்களவை வந்து அதானி பற்றி பேசுகிறார். அதானியின் ஊழல் நாட்டை மட்டுமல்ல உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. ராகுல்காந்தி மக்களவை வரக்கூடாது, அவரது குரல் ஒலிக்கக்கூடாது என்று இப்படி செய்து உள்ளது. இதே போல 1922- ல் மகாத்மா காந்தி மீது தேச துரோக வழக்கு பொய்யாக போடப்பட்டது. அந்த வழக்கிற்கு இதே போல 2 ஆண்டுகாலம் தண்டனை விதித்தனர்.

அதில் இருந்து போராடி வெற்றி பெற்றார் மகாத்மா காந்தி. அது போல ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. மக்கள் மன்றத்தில் இதனை நாங்கள் எடுத்து செல்வோம்" இவ்வாறு கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com