“மக்களின் ஆதரவை பாஜக இழந்து வருகிறது” - இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா

மக்களின் ஆதரவை பாஜக இழந்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
“மக்களின் ஆதரவை பாஜக இழந்து வருகிறது” - இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா
Published on

நாகை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் நாகையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா, கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய டி.ராஜா, தமிழகத்தில் திமுக அரசு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார். கூட்டாட்சி நெறிமுறைகளை காப்பாற்றி சமத்துவம், சமூகநீதிக்கான முயற்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தி வருகிறார் என அவர் தெரிவித்தார்.

5 மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றாலும் அக்கட்சி மக்களின் ஆதரவை இழந்து வருகிறது எனக் கூறிய அவர், பாஜகவை வீழ்த்த மதசார்பற்ற மாநில கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com