தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல - கேசவ விநாயகம் பேச்சு

தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல என்று பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் கூறியுள்ளார்.
தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல - கேசவ விநாயகம் பேச்சு
Published on

சென்னை,

சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லாமலேயே கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக உடனான கூட்டணி முறிந்த நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் பேசியதாவது:-

தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு புதிதல்ல. தமிழகத்தில் இதற்கு முன் பாஜக பல முறை தனித்து போட்டியிட்டுள்ளது. நாம் அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். மாவட்ட தலைவர்களை டெல்லி தலைமை கண்காணித்து கொண்டிருக்கிறது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com