பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரப்புகிறார்கள் - காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு

பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரப்புகிறார்கள் என்று காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரப்புகிறார்கள் - காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு
Published on

சென்னை,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தியும் சந்தித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் உ.பி. சம்பவத்திற்கு நீதி கேட்டும், ராகுல் மற்றும் பிரியங்கா தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெரம்பூரில் தமிழக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

ஆர்ப்பாட்டத்தில் காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அந்த கூட்டத்தில் பேசிய காங். செய்தி தொடர்பாளர் குஷ்பு, அமித் ஷா நலம்பெற டுவிட் போட்டதால் நான் பாஜகாவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவியது. கட்சி மாறிய வதந்திக்கு இந்தக்கூட்டத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் விரைவில் பதில் சொல்லும் காலம் வரும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com