

சென்னை,
தேர்தல் நடைமுறைகளில் மாற்றம், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, புதுடெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் சிஜேபி அறிவித்திருக்கும் போராட்டத்தை முன்னிட்டு, ஏராளமான இளைஞர்களும், பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
போராட்டப் பகுதியில் செய்தி சேகரிக்க வந்திருந்த செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே “தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் அமைதியாக போராடிய இளைஞர்களை கைது செய்து, யாருக்கு பயந்து நடுங்கி போராட்டத்தை நசுக்குகிறார் டம்மி முதல்-அமைச்சர் என உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இந்தநிலையில் திமுக எம்.பி.கனிமொழி எக்ஸ் தள பதிவில்,
இன்று தமிழ்நாட்டில் போராடுபவர்களை தவெக அரசு ஒடுக்குவதைப் பார்க்கும்போது ஒன்று மட்டும்தான் உறுதியாகிறது. டெல்லியில் இருக்கும் தவெகதான் பாஜக, தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக என அதில் பதிவிட்டுள்ளார்.