‘அரசியல் காரணங்களுக்காக அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது’ - சசிகாந்த் செந்தில்


‘அரசியல் காரணங்களுக்காக அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது’ - சசிகாந்த் செந்தில்
x

பொதுமக்களுக்கு நாளை பிரச்சினை ஏற்பட்டால் எந்த அரசு அமைப்பையும் அணுக முடியாது என சசிகாந்த் செந்தில் குறிப்பிட்டார்.

சென்னை,

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“அரசியல் காரணங்களுக்காக அனைத்து அமைப்புகளையும் பா.ஜ.க. பயன்படுத்துகிறது. தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து அரசு அமைப்புகளையும் பயன்படுத்துவதற்கு அவர்கள் தயங்குவதே இல்லை. இதனால்தான் ஜனநாயகம் அழிகிறது என்று நாம் சொல்கிறோம்.

ஜனநாயகம் அழிகிறது என்று சொல்லும்போது, அது சாதாரண வார்த்தை மட்டும் கிடையாது. நாளை பொதுமக்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டால் எந்த நிறுவனத்தையோ, அல்லது மத்திய அரசு அமைப்பையோ, அரசியல் சாசன அமைப்பையோ நாம் அணுக முடியாத நிலை ஏற்படும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story