பட்டியலின மக்களை குறிவைத்து பாஜக செயல்படுகிறது - திருமாவளவன் பேச்சு

தமிழகத்தில் பட்டியலின மக்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
பட்டியலின மக்களை குறிவைத்து பாஜக செயல்படுகிறது - திருமாவளவன் பேச்சு
Published on

காஞ்சிபுரம்,

தமிழகத்தில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது:-

பெரியாரை ஏற்றுக்கொண்ட எவராலும் ஆர்.எஸ்.எஸ், பாஜகவை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இப்போது அவர்கள் குறிவைத்திருப்பது தலித் மக்களைத்தான், பழங்குடி மக்களைத்தான்.

இவர்களை எப்படியாவது கலைத்து விட வேண்டும். ஒவ்வொரு ஊருக்குள்ளும் போய் பாஜக கொடியை ஏற்ற வேண்டும். ஊருக்குள்ளே முரண்பாடுகளை, மோதலை உருவாக்க வேண்டும். இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்க வேண்டும் என்று இருக்கிறார்கள்.

கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com