பா.ஜ.க. நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது

தமிழகத்தில் பா.ஜ.க. நாளுக்குநாள் வளர்ந்து வருவதாக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி கூறினார்.
பா.ஜ.க. நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது
Published on

திருக்கோவிலூர்

கொடியேற்று விழா

திருக்கோவிலூர் அருகே உள்ள ரிஷிவந்தியம் ஒன்றியம் மண்டகப்பாடி கிராமத்தில் பா.ஜ.க. கொடியேற்று விழா நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவர் அருள் தலைமை தாங்கினார். மாநில தரவு மேலாண்மை பிரிவு செயலாளரும், திருக்கோவிலூர் தொழிலதிபருமான ஆர்.கார்த்திகேயன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், ஒன்றிய தலைவர் சின்னதுரை, மாவட்ட பொதுச்செயலாளர்கள் ராஜேஷ், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், தொழில் அதிபருமான ஜி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

ஆதரவு பெருகி வருகிறது

தமிழகத்தில் ஆட்சி செய்த திராவிட கட்சிகள் வளர்ச்சி பாதை என்பதை மாற்றி தங்களது சொந்த நலனுக்காகவே ஆட்சி செய்ததால் மக்களின் தேவைகள் தீர்ந்த பாடில்லை. பொருளாதாரத்தில் இன்னும் ஏழ்மையான நிலைமையிலேயே தமிழக மக்கள் உள்ளனர். தமிழகத்தில் பா.ஜ.க. நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறவும் அல்லும், பகலும் போராடி வருகிறார். திராவிட கட்சிகளிடம் இருந்து மாநிலத்தை மீட்டெடுக்கவே என் மண், என் மக்கள் நடை பயணத்தை தலைமை யேற்று நடத்தி வருகிறார். இந்த நடை பயணத்தின் போது ஒவ்வொரு பகுதிகயிலும் மக்கள் ஆதரவு பெருகி வருவதை பார்க்க முடிகிறது. தமிழகத்தை ஊழல் செய்யும் கட்சிகளிடம் இருந்து மீட்டெடுக்கவே பெரும் போராட்டம் நடத்தி வருகிறார். மக்கள் நலனுக்காக பா.ஜ.க. பல்வேறு போராட்டங்களை தமிழகத்தில் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதன் மூலம் பா.ஜ.க. தமிழகத்தில் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக உருவெடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட நிர்வாகிகள் ஹரி, கருணாகரன், பொருளாளர் குமரவேல், ஆன்மீக பிரிவு நிர்வாகி முருகன், ஒன்றிய பொருளாளர் வடமலை, கிளை தலைவர்கள் விஜயன், முருகன் மற்றும் சரண்ராஜ், ஒன்றிய பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் வடமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பெருமாள் கோவில் தர்மகர்த்தா ரத்னாகரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com