தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து

தேமுதிக தலைவர் விஜயகாந்த் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து
Published on

சென்னை,

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

எளியோரை அரவணைக்கும் வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான அண்ணன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com